செடிகள் நன்கு செழிப்பாக வளர
செடி தொட்டிகளில் நிறைய எறும்புகள் இருக்கும். எறும்புகள் செடியின் வளர்ச்சியை அழித்துவிடும். செடியில் சரியாக பூக்கள் பூக்காது, சரியாக காய்கள் காய்க்காது.எனவே செடி தொட்டியில் இருக்கும் எறும்புகளை விரட்ட ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ,மற்றும் ஒரு ஸ்பூன் பட்டை தூள், இரண்டையும் ஒன்றாக கலந்து ,செடியின் வேர் பகுதியில் தூவிவிடுங்கள். இவற்றின் வாசனையால் எறும்புகள் அனைத்தும் பயந்தோடிவிடும்.
பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது. எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும்.
0
Leave a Reply