தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் .
மனித வாழ்க்கைக்கு பணம் மிக அவசியம். மனிதர்களாகிய நாம் அனைவரும் பணத்தை சம்பாதித்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கிறோம். பாதுகாப்பான வழியில் நல்ல வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மிக பிரபலமாக உள்ளன. தபால் அலுவலக திட்டங்கள் முதலீட்டுக்கு சிறந்த வழியாக கருதப்படுகின்றன.
தபால் அலுவலகம் (Post Office) பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. அனைத்து திட்டங்களும் அதிகப்படியான நன்மைகளை அளிப்பதால், முதலீட்டாளர்களுக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பமே எற்படுவதுண்டு. அந்த அளவிற்கு இந்த திட்டங்களில் அதிக நன்மைகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அட்டகாசமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் 6 தபால் நிலைய திட்டங்கள்.
ஒவ்வொரு காலாண்டிலும் தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் மாறும். நடப்பு நிதியாண்டான 2024-25ன் இரண்டாம் காலாண்டிற்கான, அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்கள் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும். அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எந்த திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்ற தகவல், உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் உதவியாக இருக்கும்.
தபால் அலுவலகத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
- நிலையான வைப்பு
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
- மாதாந்திர வருமான வைப்பு
- தொடர் வைப்பு
- தேசிய சேமிப்புச் சான்றிதழ்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா
- மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ்
- கிசான் விகாஸ் பத்ரா
போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 7.7% வட்டி கிடைக்கும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து கூட்டு வட்டியை வழங்குகிறது. அதாவது வட்டிக்கு வட்டி கிடைக்கும்
0
Leave a Reply