பிரிமியர் லீக் பெண்கள் கிரிக்கெட் பெங்களூரு அணி 2வது முறையாக வெற்றி.
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் பைனலில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா (87), ஜார்ஜியா (79) கைகொடுக்க பெங்களூரு அணி (204/4, 19.4 ໑) 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (203/4) குஜராத்மாநிலம் வதோதராவில் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக (2024, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் ஸ்மிருதி, ஆட்ட நாயகி விருதை வென்றார்.
ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம், கடந்த ஆண்டு (நவ. 23) நடக்க இருந்த திருமணம் ரத்தானது. இந்த சோகத்தில் இருந்து மீண்ட ஸ்மிருதி, பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை வென்று தந்தார்.
"களத்திற்கு, வெளியே கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் அணியை சிறப்பாக வழிநடத்தியஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது என பெங்களூரு அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல்கூறினார். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்," என்றார்.
0
Leave a Reply