கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், செட்டை இரண்டாவது 6-1 என வென்றார்.
அல்காரஸ் 6-2, 6-1 என முடிவில் வெற்றி பெற்று ,இத்தொடரில் முதன்முறையாக சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றினார். ஏ.டி.பி., ஒற்றையரில் தனது 26வது பட்டம் வென்றஅல்காரஸ், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா துபாய்டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றை யரில் ஜெசிகா பெகுலா 10 வது பட்டம் வென்றார்.
0
Leave a Reply