மழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மழையின் காரணமாக, ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து, ஜன்னல் விளிம்பில் தூவினால் எளிதாக திறக்கலாம். மழை காலத்தில் தரை குளிர்ச்சியாய் இருந்தால், தரையில், நியூஸ் பேப்பரை விரித்து. அதன் மேல் பாயை விரித்து படுத்தால். குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது.
ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.
பால்,காய்கறிகள், உலர்ந்த பழங்கள், தானியங்கள், பிஸ்கட்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
செல்போன் சார்ஜ், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
காற்று, மழையின்போது மரம் அடர்ந்த சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
வெளியே செல்லும்போது குடை. மழை கோட், நீர் புகா பைகளை எடுத்துச் செல்லவும்.
ஏடிஎம்களில் அடிப்படை தேவைக்கான பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
0
Leave a Reply