ராஜபாளையத்தில் நாளை மின் குறைதீர் முகாம்!
ராஜபாளையம் பொன்னகரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (அக். 6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்சாரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் குறைகளை பொதுமக்கள் நேரில் தெரிவித்துப் பயனடையலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply