25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'ராமாயணா' படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ராமாயணா' படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ராமாயணம் கதையை படமாக இயக்க திரையுலகை சார்ந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு 'ஆதி புருஷ்' படம் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் வெளியானது.. கடந்த வருடம் ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தற்போது ராமாயணம் கதை தற்போது பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் இணைந்து நடித்து வரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். அத்துடன் ராவணனாக யாஷும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்து வருகின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன், நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கசிந்ததுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

, 'அனிமல்' படத்தில் சரிக்கு சமமாக பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாரித்த ரன்பீர் கபூர் தற்போது இராமராக அவதாரம் எடுத்துள்ளார். அனிமலை தொடர்ந்து இப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News