ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: நேஹாவுக்கு தங்கம்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த தொடரில், இந்திய வீராங்கனை நேஹா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்கள் 59 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அபிகாயில் நெட்டேவை எதிர்கொண்ட முன்னாள் உலக சாம்பியனான 17 வயது நேஹா, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கமாக இது அமைந்தது. முன்னதாக அமன் ஷெராவத் தங்கம் வென்றிருந்தார்.
பெண்கள் 62 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மான்சி, கனடாவின் அனா கோடினெஸ் கோன்சலசிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, 62 கிலோ பிரிவுக்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் கஜகஸ்தானின் இரினா கஸ்னட்சோவாவை 14-5 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் சவிதா, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply