ரவா பர்பி.
தேவையான பொருட்கள்-
1 கப் ரவை,3 கப் பால்,1 கப் சர்க்கரை,30 பாதாம்,5 மேஜை கரண்டி நெய்
செய்முறை -
ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் நன்றாக வறுக்கவும்.
பின்பு மூன்று கப் பால் சேர்த்து சிறிது ரவை கெட்டியானவுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் எண்ணெய் நன்றாக தடவி சமைத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும். பின் அதன் மீது நறுக்கிய பாதாமை தூவி விடவும்.
15 நிமிடம் கழித்து பர்பி மாதிரி வெட்டி எடுத்து பரிமாறவும்.
0
Leave a Reply