சிவப்பு அவல் தேங்காய் சாதம் .
தேவையான பொருட்கள்-
1-1/2கப் சிவப்பு அவல்,
1டீஸ்பூன்மஞ்சள் தூள்,150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது,5பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது,
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது,
2டேபிள்ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை,
1/2கப் தேங்காய் துருவல்,சிறிதளவுகறிவேப்பிலை,
1டீஸ்பூன் கடுகு ,உளுத்தம்பருப்பு,4டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையானஅளவு உப்பு,
செய்முறை
அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். அவல்தேங்காய் சாதம் தயார்.
0
Leave a Reply