ரெய்ஷி காளான்!
காளான். பலருக்கும் பிடித்த அற்புதமான உணவு வகை. சாப்பிட உகந்த காளான் இனங்கள் பல உள்ளன. மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. அதில் ஒருவகை தான், ரெய்ஷி காளான். இது, லிங்ஜி எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு ஆசியா பகுதியை சேர்ந்தது.
ஆசிய நாடான சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது கசப்பு சுவை உடையது. இதில், வெவ்வேறு உயிர் வேதியியல் சேர்மங்களான,டிரைடர் பெனாய்டு, பாலி சாக்கரைடு, பெப்டிடோகிளைகான் மூலக்கூறுகள் உள்ளன.
இந்த காளான், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி ஆரோக்கியம் தருகிறது. தொற்று நோயை தடுக்க உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது.
இதில், ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் உள்ளது. உடல் வீக்கங்களை குறைக்கிறது. தசை வலியை நீக்குகிறது. கல்லீரலை ஆரோக்கியமாக்க உதவுகிறது. உடனடியாக ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது..
0
Leave a Reply