அடர்த்தியாக தலைமுடி வளர அழுகிய தேங்காய்
அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.
இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் தலைமுடி வளர, அழுகிய தேங்காயில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
0
Leave a Reply