சாமை வெஜிடபிள் புலாவ் .
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி -1 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, பிரியாணி இலை -1, பட்டை, இலவங்கம், ஏலக்காய்-சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன், கரம் கரம் மசாலர் -1 ஸ்பூன், பீன்ஸ், கேரட், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய் எல்லா காய்கறிகளும் நறுக்கியது -1 கப், எண்ணெய் & உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரில் எண்ணெய்ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், இலவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
ஊறவைத்த சாமை அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து, 1 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைத்து, குக்கரை மூடி வேகவைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக 'வதக்கிக்கொள்ளவும்.
குக்கரில் 1 விசில் வந்ததும் திறந்து, வதக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து கலக்கவும். 5 நிமிடம் சூட்டில் மூடி வைத்து ஆவியில் ஊறவிடவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி சூடாக பரிமாறவும்.
இந்த சாமை வெஜிடபிள் புலாவ் லேசானதும், சத்தானதும் உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி 'சாப்பிடக்கூடியது.
உடல் ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் மில்லெட் உணவுகள் மிகவும் முக்கியமானவை. அதில் சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள் மிக இலகுவாக ஜீரணமாகும் சத்தான உணவு.
0
Leave a Reply