முகத்தில் பருக்களால் வரும் தழும்புகள், அம்மை வடுக்கள், காயங்களால் உண்டான வடுக்கள் மறைய.....
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து வடுக்கள் இருக்கும் இடம் அல்லது முகம் முழுக்க கூட தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை உலரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். வடுக்கள் தழும்புகள் அதிகமாக இருந்தால் தினமும் இதை பயன்படுத்தலாம். முகத்தில் பருக்களால் வரும் தழும்புகள், அம்மை வடுக்கள், காயங்களால் உண்டான வடுக்கள் மறையும்.
வெயிலினால் ஏற்படக் கூடிய சரும எரிச்சல் போன்றவற்றை முட்டையின் ஓடு பயன்படுத்துவதால் சரி செய்து விடலாம். ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன், சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து நிமிடம் ஊற விடவேண்டும் பின்னர் அந்தக் கலவையை சருமத்தில் தடவி வந்தால் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகி விடும்.
0
Leave a Reply