வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் சென்னையில் இருந்து பெங்களூருவை சென்றடைய இரண்டாவது வந்தே பாரத் ரயில்
சென்னை பெங்களூர் இடையே கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. மாலை டீ குடித்துவிட்டு சென்னையில் இந்த ரயிலில் ஏறினால், இரவு உணவிற்கு பெங்களூருக்கு சென்று விடலாம். தமிழகத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி காட்பாடி வழியாக பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மைசூருக்கு சென்று வருகிறது.
இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது தென்னக ரயில்வே நிர்வாகம் சென்னை-மைசூர் இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயிலை கடந்த 12ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி கடைசியாக துவக்கி வைத்த 10 வந்தே பாரத் ரயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த ரயில் தற்போது பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.மைசூர்-சென்னை இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயில் வரும் ஏப் 5ம் தேதிக்கு பிறகு அதிகாலை 6:00 மணிக்கு மைசூரிலிருந்து கிளம்புகிறது. பின்னர் இது பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வழியாக பெங்களூருவை கடந்து மதியம் 12:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. வெறும் 6 மணி நேரம் 20 நிமிடத்தில் இந்த ரயில் மைசூர்-ல் இருந்து சென்னைக்கு வரும்.
தற்போது இந்த ரயில் சென்னை- பெங்களூரு வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு கிளம்பி பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வரை தற்போது பயணிக்கிறது. ஏப் 5ம் தேதிக்கு பிறகு மைசூர்விற்கு இரவு 11:20 மணிக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு இடையேயான முதல் வந்தே பாரத் ரயில் பகல் நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பும் நிலையில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இரவு நேரத்தில் பயணிக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இரண்டாம் வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் சரியாக இரவு 8:48 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. இரண்டாம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்பவர்கள் வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும்இந்த ரயிலில் உள்ள டிக்கெட் விலையை பொருத்தவரை சென்னையிலி ருந்து கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் வரை பயணிக்க ஏசி சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 1130 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 2020 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது முதல் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலையை விட சற்று அதிகமாகும். வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும்.
0
Leave a Reply