முதியோர்களுக்கு வரும் வலிப்பு நோய்.
மூளையில் ஏற்படும்மின் அலைமாற்றங்களால், கை, கால்களில் வலிப்பு வருவதை வலிப்பு வியாதி என்பர். உணர்வு இழந்து, இரு கைகளிலும், கால்களிலும் வலிப்பு வருவதைப் பொதுவான வலிப்பு என்பர். ஒரு பக்கம் மட்டும் வரும் வலிப்பை ஒரு பகுதி மட்டுமான வலிப்பு என்று சொல்லப்படும்.
சில வலிப்பு நோய்களில் உணர்வு தடைபடும். இல்லாத வாசனை உணரப்படும், உதட்டையோ, கைகளையோ பிசைந்து கொள்வார்கள். இது சிக்கலான பகுதி வலிப்பு என்று சொல்லப்படும். சில வலிப்பு வியாதியில் கண்களைச் சிமிட்டுவார்கள், உணர்வு இழக்கப்படும். இதை இலகு வலிப்பு என்று சொல்வர். அரிதாகச் சிலருக்கு இசைச் சத்தம், கணக்குப் போடும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது வலிப்பு ஏற்படும்.இந்த வலிப்பு ஏதாவது ஒருவகையில் வரலாம். சில சமயம் இது சிறுவயதிலிருந்தே இருக்கும்.
அலை மாற்றங்கள் இல்லாமல், மூளையில்:
ரத்தக்கட்டி,பக்கவாதம்,புற்றுநோய்க் கட்டி,ரத்தத்தில் சோடியம், கால்சியம் குறைதல்,மூளையை நோய்க்கிருமி தாக்குதல்,
ஆகிய காரணங்களாலும் வலிப்பு நோய் வரலாம்.
முதியோர்கள் வலிப்பு நோய் வந்தால் கீழே விழுந்து தலையிலோ, எலும்பிலோ அடிபட வாய்ப்புகள் அதிகம்.
சிகிச்சை முறை
1. வலிப்பு நோய் வந்தால், முதியோர்கள் நரம்பியல் மருத்துவரை அணுகித் தங்கள் பிரச்னை பற்றி விளக்க வேண்டும்.
2. அதன் பிறகு மருத்துவர்:
ரத்தப் பரிசோதனை
சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன்,
ஈ.ஈ.ஜி. மூளையின் மின் அலை வரைபடம்,
ஆகியவற்றை எடுத்து வலிப்பிற்கான காரணத்தை அறிந்து அதற்கேற்றவாறு வைத்திய முறையை ஆரம்பிப்பார்கள்.
3.வயதிற்கேற்றவாறு, காரணத்துக்கு ஏற்றவாறு, எடுத்துக்கொள்ளும் மாத்திரைக்கு ஏற்றவாறு வலிப்பைத் தடுக்கும் மருந்தை மருத்துவர் எழுதிக் கொடுப்பார்.
நோயாளிகளுக்கான அறிவுரைகள்
மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும்.
மருத்துவர் வரச் சொல்லும்போது சென்று பார்க்க வேண்டும்.
நேரத்துக்குத் தூங்க வேண்டும்.
நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
வலிப்பு நோய் குழந்தைகளைப் போல முதியோர்களையும் பாதிக்கிறது. சரியான சிகிச்சை மூலம் வலிப்பு வராமல் தடுக்கலாம். மற்ற காரணங்களால் வரும் வலிப்புக்கு மருத்துவர் தகுந்த ஆலோசனை கொடுத்துச் சிகிச்சை வழங்குவார். மூளை நலம் காப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.
0
Leave a Reply