சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்தல்
விவசாயிகள் தங்களது விளை நிலங்களில்ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரைவகைகளை சாகுபடி (Cultivation) செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் (Rotational) பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் கூடுதல்மகசூல் (Yield) கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினைதொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சிமுறையில் பயிர் செய்வதன் மூலம்நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவுஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சிமுறையை மேற்கொள்ளலாம்.
இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர்சாகுபடி (Intercropping Cultivation) செய்வதன் மூலம் பயிர் மகசூல் (Yield) அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுபடுத்த பட்டு, பூச்சிகளின் தாக்குதலைவெகுவாக குறைக்கலாம்.
செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது நன்மை செய்யும்பூச்சிகள் மற்றும் தீமை செய்யும்பூச்சிகள் எவை என்று பாராமல்அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப்பூச்சிவிரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளைவிரட்டும் பண்புடையது. மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி சுவையானஆரோக்கியமானவற்றை உண்ணலாம்.
0
Leave a Reply