25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வாரணாசியில் 300 ஆண்டுகள் சாய்ந்திருக்கும் சிவன் கோயில்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாரணாசியில் 300 ஆண்டுகள் சாய்ந்திருக்கும் சிவன் கோயில்!

உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றி கேட்டிருக்கிறோம். அது சுமார்4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால், வாரணாசியில் உள்ள இந்த கோயில் சுமார் ஒன்பது டிகிரி சாய்வாக உள்ளது. மேலும் இது ஆண்டுதோறும் மேலும் மேலும் சாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர். இப்படி இந்த கோயில் சாய்ந்து வருவதற்கு ஒரு சாபம்தான் காரணம் என்கிறார்கள்.வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உயரம்74 மீட்டர். இது பைசா சாய்ந்த கோபுரத்தை விட 20 மீட்டர் அதிகம்.

இந்தக் கோயில் சாய்ந்ததற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ராணி அஹில்யா பாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களை கட்டும்போது, அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னா பாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார். பெரிய பங்கை கொடுத்த அந்த பணிப் பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரே கோயிலுக்கு வைத்ததைக் கேட்ட அஹில்யா இந்த கோயிலுக்கு சாபம் கொடுத்ததால்தான், நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாக சொல்கிறார்கள்.

மற்றொரு கதைப்படி ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால், அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோயில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு அம்மாவின் கடனை அடைத்து விட்டதாக பெருமையுடன் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அவன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டவுடன், அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதை காட்ட இக்கோயில் பின்னால் சாய்ந்தது என்று கூறுகின்றனர்.

ஆனால், அறிவியல்படி நதியின் கடையில் கட்டப்பட்ட இந்த கோயிலின் நிலப்பரப்பு ஸ்திரத்தன்மை குறைந்த இடம், நீரோடும் பாதையில் நில அரிப்பு ஏற்பட்டு தளம் பலவீனம் அடைவதால் நாளடைவில் இக்கோயில் ஒரு பக்கம் சாய்ந்து வருகிறது. மேலும், இது வருடத்தின் பாதி நாள் நதியில் மூழ்கி விடுகிறது. ஒருசில நாள் இதன் கோபுர உச்சி வரை கூட தண்ணீர் இருக்கிறது. இதனால் இந்த கோயிலுக்கு வருடத்தின் சில நாட்கள் மட்டுமே பூஜை வழிபாடு எல்லாம் செய்யப்படுகிறது. கோயிலின் கருவறையில் ஒன்றல்ல பல சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனாலே இது சிவனின் சிறிய நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதால் இந்தக் கோயிலின் கருவறையில் யாரும் நேராக நிற்க முடியாது. சாய்ந்து பேலன்ஸ் பண்ணிதான் வழிபாடு செய்ய வேண்டும்.1860களில் எடுக்கப்பட்ட இந்த கோயிலின் படங்களில் மட்டுமே நேராக இருப்பதைக் காண முடிகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News