25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆசிய பேட்மிண்டன் போட்டியில் வெற்றி  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆசிய பேட்மிண்டன் போட்டியில் வெற்றி  .

 சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 12-21, 19-21 என்றநேர் செட்டில் லீசேக்யிடம் (சீனதைபே) தோற்றார். உலக தரவரிசையில் 25-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீரர் லின் ஷிபெங்கை (சீனா) வென்றார். இந்தியாவின் பிரனாய் தன்னை எதிர்த்த நுயேன் ஹாய் டாங்கை (வியட்நாம்) 24-22, 21-12 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 'பெண்கள் ஒற்றையரில் 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் லிங்சிங்கை  வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 67 நிமிடங்கள் தேவைப்பட்டது. 2-வது சுற்றில் சிந்து, 2 முறை உலக சாம்பியனான சீனாவின் வாங்ஷியியை எதிர்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News