யுனிசெப் இந்தியாவின் தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தூதராக, இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்மிருதி மந்தனா, குழந்தைகளின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளார்.
இதுகுறித்து ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “இந்தப் பொறுப்பை பெருமையாகக் கருதுகிறேன். மன உறுதியுடன் போராடினால் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதை கிரிக்கெட் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறவும் தகுதியுடையவர்கள்” என்றார்.
தெற்காசியாவுக்கான யுனிசெப் தூதராக உள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மந்தனாவை யுனிசெப் குடும்பத்திற்கு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் உரிமைகளுக்காகச் சிறந்த குரலாக அவர் திகழ்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply