ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெண்கள் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியா தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணி மோதிய, இரண்டாவது போட்டி நேற்று பெங்களுரில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெண்கள் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி ஜோடி துவக்கம் கொடுத்தது. ஹேமலதா 24 ரன் எடுத்தார். மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்தனர். மந்தனா, ஒருநாள் அரங்கில் 7வது சதம் (84 வது இன்னிங்ஸ்) விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு 171, ரன் சேர்த்த போது மந்தனா 136 ரன் 120 பந்துகளில் அவுட்டானார். மறுபக்கம் யர்மன்பிரீத் கவுர், 6-வது சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 325,3 ரன் குவித்தது. ஹர்மன்பிரீத் 103 ரன்கள், ரிச்சா 25 ரன்கள் அவுட்டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply