25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் இதுவரை 1,255 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் இதுவரை 1,255 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க மொத்தம் *3,853* வாக்காளர்கள் (2,009 மூத்த குடிமக்கள் மற்றும் 1,844 மாற்றுத்திறனாளிகள்) படிவம் 12D மூலம் விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் வாக்கு சேகரிப்பில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் *1,255* தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதன் தொகுதிவாரியான விவரம்:

*இராஜபாளையம்:* 149 மூத்த வாக்காளர்கள், 115 மாற்றுத்திறனாளிகள்.

*திருவில்லிபுத்தூர்:* 109 மூத்த வாக்காளர்கள், 140 மாற்றுத்திறனாளிகள்.

*சாத்தூர்:* 61 மூத்த வாக்காளர்கள், 45 மாற்றுத்திறனாளிகள்.

*சிவகாசி:* 74 மூத்த வாக்காளர்கள், 66 மாற்றுத்திறனாளிகள்.

*விருதுநகர்:* 63 மூத்த வாக்காளர்கள், 78 மாற்றுத்திறனாளிகள்.

*அருப்புக்கோட்டை:* 135 மூத்த வாக்காளர்கள், 98 மாற்றுத்திறனாளிகள்.

*திருச்சுழி:* 45 மூத்த வாக்காளர்கள், 77 மாற்றுத்திறனாளிகள்.

ஒட்டுமொத்தமாக 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை *636 மூத்த குடிமக்கள்* மற்றும் *619 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,255 பேர்* தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

 தபால் வாக்குகளைச் சேகரிக்க, வாக்குப்பதிவு அலுவலர் தலைமையில் நுண்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட *49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வரும் 2026 ஏப்ரல் 17-ம் தேதி வரை* விண்ணப்பித்த வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

  படிவம் 12D-இல் விண்ணப்பித்தவர்கள் பின்னர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது என்பதால், தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாட்களில் வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் *மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,.* அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News