மாடி தோட்டம் போடுபவர்கள் செடிகளை பராமரிக்க சில குறிப்புகள்
மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும், தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் சிறிய அளவில் கார்டன் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள். வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும், செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியதுதான்.இதை தவிர்க்க செடி வைக்கும் போதேசரியான மண் பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கனம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மாடிதோட்டம் போடுபவர்கள் வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது.
செடி வைக்கும் போது நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லகூடிய தேங்காய் நார் துகள்கள், ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல் என்று நான்கையும் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.செடிகளுக்கு செம்மண் எப்போதும் சிறந்தது என்றாலும் அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் கிடைக்கும் மண்ணை எடுத்து, அதில் இருக்கும் பெரிய கற்களை அகற்றி, மண்ணை சுத்தம் செய்யவும். பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.செடி வைக்கும் போதே, மண்ணில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டால் விதைகளோ, வேரோ நன்றாக பற்றிக்கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணல் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் ,இது வேர்பகுதியை இருக்கி கட்டியாக்கிவிடும்.
கீரைகளோ, காய்கறிகளோ, பழச்செடிகளோ அதற்கேற்ப மண்ணை நிரப்ப வேண்டும். சிறிதாக செடிகளை வளர்க்க செய்யலாம். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக பராமரிக்க முடியும். செடிகள் பட்டு போகாமல் பார்க்கமுடியும். இந்த குறிப்புகளை கவனமாக கடைப்பிடித்தாலே செடிகள் அருமையாக வளர்ந்திருக்கும். இப்போது செடிகள் வளர, வளர காய்களும், பூக்களும், பழங்களும் நிறைவாக கொடுக்க வேண்டும். அதோடு பூச்சிகளும் செடிகளை பற்றாமல் இருக்க வேண்டும். அதற்கான உரம் தயாரிப்பு குறித்து பார்க்கலாம்.
0
Leave a Reply