சோயா உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள் - சோயா 1 கப்,சோம்பு, சீரகம் தலா அரை ஸ்பூன், கரம் மசாலா கால் ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், கடலை மாவு கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் 10, பூண்டு 10 பல், தக்காளி 2, தேங்காய் சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தாளிக்க / பட்டை, கிராம்பு ஏலக்காய், கறிவேப்பிலை.
செய்முறை - சோயாவை அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து, சோம்பு சீரகம், சேர்த்து மிக்ஸியில் கொர, கொரப்பாக அரைத்து அத்துடன் கரம் மசாலா, மல்லித்தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு எடுத்து நன்றாகக் கலந்து உருண்டை பிடித்து 1 உருண்டை அளவு எடுத்து வைத்து விட்டு மீதி உருண்டைகளை ஆலியில் வேக வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஆவியில் வெந்த சோயா உருண்டைகளை லேசாக பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் ஆக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான உப்பு கலந்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் எடுத்து வைத்த சோயா உருண்டையை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசைன போனவுடன் பொரித்த சோயா உருண்டைகளைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
0
Leave a Reply