முன்னாள் படைவீரர்கள் , அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் .
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று கலந்து கொண்டு தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply