பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்வு பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக்கடன் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக்கடன் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் (10.09.2024) நடைபெற்றது.
தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 10-ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்க்கும் விதமாக இன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், 10 வகுப்பில் 12 மாணவர்களும், 12-ஆம் வகுப்பில் 25 மாணவர்களும் என மொத்தம் 37 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்மாணவர்களிடம் தனித்தனியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் 7 மாணவர்கள் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 8 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் என மொத்தம் 15 மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply