25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா  மற்றும் தந்தை பெரியார் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் .

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 

1. வாய்மையே வெல்லும்    
2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்  

3. காஞ்சித் தலைவன்  

4. அண்ணாவின் தமிழ்வளம் ,ஆகிய தலைப்புகளிலும், 

கல்லூரி மாணவர்களுக்கு 

1. எழுத்தாளராக அண்ணா 

2. தமிழும் அண்ணாவும் 

3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்  

4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.

தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு   பள்ளி மாணவர்களுக்கு  

1. தந்தை பெரியாரின் சமூக  நீதிச்  சிந்தனைகள்   

2.   பெரியாரும்  பெண்  விடுதலையும்   

3.  வைக்கம் வீரர்   

4.  சுயமரியாதை இயக்கம் ஆகிய தலைப்புகளிலும்                  

கல்லூரி மாணவர்களுக்கு   

1. தன்மானப் பேரொளி 

2.தெற்காசியாவின் சாக்ரடீஸ் 

3.சமுதாய விஞ்ஞானி பெரியார் 

4. தொண்டு செய்த பழுத்த பழம் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.
 
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- ,  இரண்டாம்பரிசு ரூ.3000/- ,  மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு   ரூ.2000/-  என்ற வீதத்திலும்  வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News