விளையாட்டு போட்டிகள் . 2026 MARCH 10 TH
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் ஆஸ்திரேலியாவில், இன்றுநடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட் டியில் வியட்நாம், ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்,இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, நியமிக் கப்பட்டார்.
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத்தில்,இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர், சுனேலிதா தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டி 2-2 என, 'டிரா' ஆனது.
இந்திய வீராங்கனை சிந்து , சுவிட்சர்லாந்தில் இன்று துவங்கும் சுவிஸ் ஓபன் பாட் மின்டன் தொடரில் இருந்து விலகினார்.
ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில்டில்லியில் பஞ்சாப், வட கிழக்கு யுனைடெட் அணிகள் மோதி,1-1 என 'டிரா' ஆனது.
0
Leave a Reply