25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாழ்க்கைத் துணைவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழ்க்கைத் துணைவி

“ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் ”என்று சும்மாவா சொன்னார்கள். தம்பதியினரின் சந்தோஷமும், ஒரு நல்ல குடும்பம் உருவாவாதற்கும் ஏன் ? நல்லதொரு தேசத்தை உருவாக்கும் பக்குவமும் இந்த வாழ்க்கைத் துணைவிக்கு உண்டு.

தன் வாழ்க்கைத் துணைவி வீட்டிற்கு வரும் பொழுது, தன்னை வரவேற்பதற்குக் காத்திருப்பாள் என்ற நினைப்பு வந்தால், நிச்சயமாக அங்கும் இங்கும் செல்ல மாட்டார்கள். நேரத்துக்கு வீட்டிற்கு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் போன் பண்ணியாவது லேட்டாக வரும் தகவலை சொல்லி விடுவார்கள். எதற்காக ? தன்னை வரவேற்கக் காத்திருக்கும் உண்மையான கண்களின் வசீகரத்தை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

நீங்க சொல்றதெல்லாம் பழைய காலம் இப்பெல்லாம் 'சும்மா பார்த்த முகத்தையே பார்க்க. போர்" என்றால் உங்கள் வாழ்க்கை போரை தொடங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்பது தெளிவாகிறது.

என் வீட்டுக்காரர் வரும்பொழுது நான் இருக்கணும் என்று ஒரு சட்டமும் இல்லை. அவர்கிட்ட ஒரு சாவி, என் கிட்ட ஒரு சாவி, எந்த நேரமானாலும் எங்கே போகணுமோ, அங்கே போய்விட்டு வரலாம். அவர் நேரத்திற்கு அவர் வருவார், என் நேரத்திற்கு நான் வருவேன்.அம்மாக்கள் மனசில்லாமல்" என்னடி? மாப்பிள்ளை இந்நேரம் ஆபிஸிலிருந்து வந்துருவாரே நீ இங்க இருக்கே ? யார் காபி போடுவார்கள் “? ”அவரா போட்டு குடிச்சிடுவாரும்மா" “அப்ப டிபன் ? பக்கத்திலே ஹோட்டல்லே சாப்பிட்டுக்குவார் ' நீ டென்ஷன் ஆகாதே அம்மா”, என்கிறார்கள் பளிச்சென்று. 

அந்நேரத்தில் செல்போன் அடிக்க “'ஹாய்டா டின்னர் பக்கத்திலே முடிச்சிட்டு எனக்கு ஒரு நூடுல்ஸ் பேக் பண்ணி வச்சுடு”. முகுந்த் (12 வயது மகன்) வந்தா அவனையும் அங்க சாப்பிடச் சொல்லிடு".  போன் கட் பண்ணியாச்சு. அம்மாவுக்கு" யாரைடி 'டா' சொன்னே மாப்பிள்ளையா ? ஏண்டி பிள்ளைக்கு தினம் தினம் ஹோட்டல் சாப்பாடு ஆகுமா ? "அம்மா அவன் சின்னபிள்ளையாம்மா ! அவனே எல்லாத்தை பாத்துப்பாம்மா ஸ 'முன்னே மாதிரி ஹோட்டல் இல்லே' இப்பொல்லாம் வீட்டை விட சுத்தமா வச்சுக்கிறாங்க" “இதையெல்லாம் சாப்பிட்டுத்தான் உன் பேரன் கோல்ட்மெடல் வாங்கியிருக்கான். விளையாட்டிலும் படிப்பிலும்” என்கிறாள்.

வாழ்க்கைத் துணைவி  தாய் என்ற அம்மாவுக்கு, அந்த காலத்தில் இந்திய ஜனாதிபதியாக இருந்த திரு.வி.வி.கிரி, பிற்காலத்தில் ஹோட்டலில் தான் எல்லோரும் சாப்பிடும் பழக்கம் வரப்போகிறது என்று கூறியதற்கு ,எல்லோரும் சகட்டு மேனிக்கு தெரிந்து பேசுகிறாரா என்ன ? என்று ஏளனம் செய்தனர். அது உண்மையாயிடுச்சே ! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.

வாழ்க்கை நம் இஷ்டத்திற்கும், எதிர் காலக் குழந்தைகள் கோல்ட்மெடல் வாங்கி, ஜெர்மன்,ஜப்பான், அமெரிக்கா படிப்பதற்கு மாத்திரம் தானா ? உள் மனதில் அன்பு, பாசம், பண்பு, அந்யோந்யம் ஆகியவற்றிற்கெல்லாம் குட்பைதான்.மணக்க, மணக்க தன் கைகளால் செய்த இட்லி சாம்பார் சட்னியை கையால் பரிமாறும் பொழுது "இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க" சாப்பிடும்மா என்று மனம் நிறைய கூறும் பொழுது ,நாம் சாப்பிடும் உணவுக் கவளங்கள் ஒவ்வொன்றும், நம்மீது பாசப்பிணைப்பினை ஏற்படுத்தத் தான் செய்யும்.

நாமே வீட்டிற்கு செல்லும் பொழுது 'வாம்மா என்று வரவேற்க ஒராளில்லாமல், சும்மா ஒப்புக்கு ஹாய் சொன்னால் எப்படி இருக்கும் .வீட்டில் நுழையும் போது “வாங்கோ, காபி சாப்பிடுங்கோ” என்று பளிச் முகத்துடன் வரவேற்கும் வாழ்க்கைத் துணைவியைக் கண்டால் அந்த வீட்டின் மீது ஒரு மரியாதை ஏற்படும்.

தன் இஷ்டத்திற்கு இருப்பதற்கு காரணம் மிகுந்த வருமானம் தான். திடீரென்று கணவனுக்கோ, குழந்தைக்கோ தீராத வியாதி வந்து விட்டால், வீடே தலை கீழ்தான். தானே சிக்கனம் பார்த்து பட்ஜெட் போட்டு. சமைத்து கவனித்தால் தான், இந்த இல்லற வாழ்க்கையை சுலபமாகத் தள்ளிக் கொண்டு போக முடியும்.

நல்ல வாழ்க்கைத் துணைவிக்கு பக்குவமும், அனுசரனையும் இயல்பாகவே இருக்கும். வாழ்க்கைச் சக்கரத்தை ஒரே சீராக ஒட்டிச் செல்வதால், தன் குடும்பத்தார் சேகரித்த சொத்தெல்லாவற்றையும் சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொண்டால், அக்கணவனும், நிம்மதியாக சம்பாதித்துக் கொட்டுவார்கள், அமைதியாக ஓரிடத்தில் (வாழ்க்கை) தென்றல் காற்று என்ற (அன்பில்) குளிர்வித்து ஓட்டும் துடுப்புக்களாக எல்லா பக்கமும் இருந்து காப்பாற்றுவார்கள், இந்த ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News