இந்தியன் ஒபன் தடகள போட்டியில் வெள்ளி வென்றார் ஸ்ரீராம்.
23 வயதுக்குட்பட்ட பீகாரில் நேற்று மூன்றாவது கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஸ்ரீராம், அதிகபட்சம் 770 மீட்டர் தாண்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் சன்மத் தர்ஷன் (7.68 மீட்டர்) வெண்கலம் கைப்பற்றினார் கேரளாவின் அனுராக் (7.87 மீட்டர்) தங்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான 200 மீட்டர் ஒட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு, 2152 வினாடி நேரத்தில் ஒடி, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். இவர் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்திலும் வெண்கலம்வென்றிருந்தார்.
பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் தமிழகத்தின் தீபிகா, மொத்தம் 4975 புள்ளி எடுத்து வெண்கலம் கைப்பற்றினார்.
0
Leave a Reply