25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பதிவு சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும்  நாட்டு/சேம்பர் செங்கல் சூளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பதிவு சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும் நாட்டு/சேம்பர் செங்கல் சூளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து சேம்பர்/நாட்டு சூளைகள் பதிவு பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் பெற்று நாட்டு செங்கல் சூளை பதிவு கட்டணம் ரூ.300/-, சேம்பர் பதிவு கட்டணம் ரூ.3000/-, சேம்பர்/நாட்டு செங்கல்சூளை விண்ணப்பக் கட்டணம் ரூ.1500/- மற்றும் மண்ணுக்குரிய ஆண்டு கனிம கட்டணம் நாட்டு செங்கல்சூளைக்கு 1 முதல் 14 அடுப்புகள் வரை ரூ.10,000/-, 15 அடுப்புகளுக்கு மேல் ரூ.12,000/, சேம்பர் செங்கல் சூளைக்கு 1 முதல் 16 அடுப்புகளுக்கு ரூ. 60,000/-, 17 முதல் 26 அடுப்புகளுக்கு ரூ.75,000/- மற்றும் 27 அடுப்புகளுக்கு மேல் ரூ.90,000/-  அரசுக்கு செலுத்தி முறைபடுத்திட செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், நடப்பாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில்

1. திரு.கிருஷ்ணன் த/பெ பெத்தணன், 2.திரு.ராமசாமி த/பெ சோலைசெட்டியார், 3.திரு.பெருமாள் பிச்சை த/பெ சீனிவாசகன், 4.திரு.திருப்பதி த/பெ கிருஷ்ணன், 5.திரு.அழகர்சாமி த/பெ சோலைசெட்டியார் ஆகியோருக்கு சொந்தமான நாட்டு செங்கல் சூளையும், சிங்கம்மாள்புரம் கிராமத்தில் 6.திரு.முருகன் த/பெ ராமசாமி, 7.திரு.சேதுராமசாமி த/பெ ராமசாமி, மற்றும் 8.திரு.கோவிந்தராஜ் த/பெ கோபால் ஆகியோருக்கு சொந்தமான நாட்டு செங்கல் சூளைகளும் (மொத்தம் எட்டு) மட்டுமே முறையாக  செங்கல்சூளை பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்நேர்வில், விருதுநகர் மாவட்டத்தில் செங்கல்சூளை பதிவு சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும் நாட்டு/சேம்பர் செங்கல்சூளை உடனடியாக உதவி இயக்குநர் அலுவலத்தை அனுகி உடனடியாக பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News