25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருச்சுழி  அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA) நிலஅளவையர் (SURVEYOR) மின்சார பணியாளர் (ELECTRICIAN) இயந்திர வேலையாள் (MACHINIST)  ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. பயிற்சி முடித்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு  ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா சீருடை (தையற்கூலியுடன்) விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளியில், தமிழ் வழியில்  பயின்ற மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் மற்றும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும்.

எனவே, திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 70100-40810,  94864-62585, 76038-28709, 95669-29663 ஆகிய தொலைபேசி  எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News