சிவகாசி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்;குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பட்டி ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், ரூ.55 ஆயிரம் மானியத்தில் ஒரு வீடு சீரமைக்கப்பட்டுள்ளதையும்,கவுண்டம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.12.12 இலட்சம் மதிப்பீட்டில், புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், செவலூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.5.63 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியினையும்,
அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், தலா ரூ.55 ஆயிரம் மானியத்தில் இரண்டு வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும்,புதுக்கோட்டை ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.10 இலட்சம் மானியத்தில் 2 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,மேலும், எம்.புதுப்பட்டி ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 126.57 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும்,கட்டசின்னம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.14.41 இலட்சம் மதிப்பீட்டில் முனியாண்டி கோவில் ஊரணி வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply