ஸ்வீட் கார்ன் தோசை
தேவையான பொருட்கள்
3 தக்காளி,6 வரமிளகாய்,7 முந்திரி,1 வெங்காயம் பொடியாக,1 குட மிளகாய் பொடியாக, சிறிதுமல்லித்தழை,தேவையானஅளவு எண்ணெய், 1 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன்,2 கப் இட்லி மாவு,.தேவையான அளவு உப்பு,1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 வெங்காயம்
செய்முறை
மிக்ஸியில் தக்காளி முந்திரி வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து
வதக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதில் வதக்கிய மசாலா வைத்து தேய்க்கவும்.
பின் வெங்காயம், குட மிளகாய், ஸ்வீட் கார்ன், மல்லித்தழை பரப்பி விட்டு நெய் விட்டு மூன்றாக மடித்து எடுத்து பரிமாறவும்.
0
Leave a Reply