25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


டேபிள் டென்னிஸ் இந்தியா சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டேபிள் டென்னிஸ் இந்தியா சாதனை

டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்பிரேசிலில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் 'நம்பர்-1'  மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, 3-2 என்ற செட்கணக்கில் (5-11, 11-9, 11-6, 8-11, 11-5) தென் கொரியாவின் ஹுவான் செங், குவான் ஹாங்ஜோடியை வென்று, பைனலுக்கு  முன்னேறியது.

இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, கலப்பு இரட்டையர் அரையிறுதியில், 3-0 என (11-7, 11–2, 11–7) சிலியின் நிகோலஸ், பவுலினா  ஜோடியை வென்று பைனலுக்குள் நுழைந்தது.

இந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர்  தொடரில் பைனலுக்கு முன்னேறியது

இந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர்  தொடரில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பைனலுக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சக வீராங்கனை தியாவை 3-1  என (11-9, 9-11, 11-9, 15-13) என வென்றார். 

ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிசில் ,மானவ்-மனுஷ் 2வது இடம், 

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா,டாங் கியு ஜோடியை சந்தித்தது. இதில் மானவ், மனுஷ் ஜோடி 2-3 (3-11, 11-7, 7-11, 15-13, 5-11) என்ற கணக்கில் போராடி  தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் ஹோனோகா  ஹஷிமோட்டோ மோதினர். இதில்  ஏமாற்றிய மணிகா 0-3 (7-11, 6-11, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News