ரத்த ஓட்டம் சீராக்கும் புளிச்சக்கீரை
இந்த கீரை புளிப்பு சுவையை கொண்டுள்ளதால் புளிச்ச கீரை என்று அழைக்கப்படுகிறது.புளிச்ச கீரை பச்சை தண்டு வகை சிகப்பு தண்டு வகை என இரு வகைகள் காணப்படுகின்றன.
பல சத்துகளைக் கொண்ட புளிச்சக்கீரை இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் பண்புகளை கொண்டது, உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனை உள்ளவர்கள் புளிச்சக்கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.
புளிச்சக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசிஉணர்வை குறைக்கிறது, இதனால் உடல் பருமனை குறைக்க முடியும்.
புளிச்சக்கீரையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். காலையில்4 முதல்5 புளிச்சக்கீரையை வெந்நீரில் சேர்த்துகொதிக்க வைத்து குடித்து வரலாம்
நீர் கோர்த்தல்பிரச்சனைஉள்ளவர்கள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பவர்கள் புளிச்சகீரை கடையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தைக் குறைக்க உதவும்.
0
Leave a Reply