தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு (Voters Information Slip) வழங்கும் பணிகள் தீவிரம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (Voters Information Slip) வழங்கும் பணிகள் 12.04.2026 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் விவரம்:
விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
இராஜபாளையம் (202): 2,14,192
ஸ்ரீவில்லிபுத்தூர் (203): 2,24,122
சாத்தூர் (204): 2,29,330
சிவகாசி (205): 2,28,205
விருதுநகர் (206): 2,00,618
அருப்புக்கோட்டை (207): 2,07,750
திருச்சுழி (208): 2,05,301
மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 15,09,518
வழங்கப்பட்ட தகவல் சீட்டுகளின் விவரம் (13.04.2026 வரை):
இன்று வரை தொகுதிகள் வாரியாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் தகவல் சீட்டுகளின் விவரம்:
இராஜபாளையம்: 2,305
ஸ்ரீவில்லிபுத்தூர்: 413
சாத்தூர்: 604
சிவகாசி: 678
விருதுநகர்: 1,260
அருப்புக்கோட்டை:3,991
திருச்சுழி: 3,686
மொத்தம்: 12,937 வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 14,96,581 வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டுகளை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று முடிக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply