தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகைகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.11.2024) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகைகளையும் மற்றும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையினையும் என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.
அதன்படி, கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளி லேட் திரு.காளிராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகையினையும், லேட் திரு.மாரிச்செல்வம் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகையினையும் என மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவி தொகைக்கான காசோலைகளையும்,கட்டுமானத் தொழிலாளி திரு.சீமைச்சாமி என்பவரின் மகன் செல்வன் ஸ்ரீமான் என்பவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப்படிப்பு பயிலுவதற்கான கல்வி உதவித்தொகை ரூ.50,000/-க்கான ஆணையையும் என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply