"டாஸ்மார்க் " விற்பனை 430 கோடி .பின் தங்கப்போகும் தமிழகம்.பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ,டாஸ்மார்க் கடைகளில் 430 கோடி ரூபாய்க்கு விற்றதாகக் கூறி தமிழகமே ஏதோ சாதனை விற்பனை ஆனது போல செய்திகளை வெளியிடுவது வெட்கமும், வேதனையும் தருகிறது.
தமிழ்நாட்டில் முதியோர் முதல், பள்ளி, மாணவ மாணவிகள் வரை மது குடிப்பதை பெருமையாக எண்ணிக் கொண்டு குடிக்கின்றனர். பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இப்படியே சென்றால் தமிழகம் போதைக்கு அடிமையாகி சீரழிவது நிச்சயம்.
மது விலக்கை கொண்டு வந்தால் தான், நம் தமிழகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. மது விலக்கை கொண்டுவருவதாக வாக்களித்தால் ஒட்டு கிடைக்காது என்பதால் ஆட்சிக்காரர்கள் ஐரூராக மது விற்பனை செய்கின்றனர். இந்தக் கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராயம் விற்பனைக்கு வந்து விடும் என சாக்கு சொல்கின்றனர் அமைச்சர்கள். கள்ளச்சாராயத்தை அரசு, மற்றும் காவல் துறையினால் தடுக்க முடியாதா ?
குஜராத் மற்றும் பீஹார் மாநிலங்களில் ஒட்டு குறைந்தாலும், பரவாயில்லை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு பூரண மது விலக்கை அங்கே உள்ள ஆட்சியாளர்கள் கொண்டு வந்து பின் தங்கிய தங்கள் மாநிலங்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பதால் தமிழ்நாடு குட்டிச்சுவராகும் என்பதில் ஐயமில்லை.
0
Leave a Reply