25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ஓசூரில் டாடா 'ஐ-போன்' உற்பத்திஆலை  நவம்பர் மாதம் முதல் உற்பத்தியை துவக்க வாய்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓசூரில் டாடா 'ஐ-போன்' உற்பத்திஆலை  நவம்பர் மாதம் முதல் உற்பத்தியை துவக்க வாய்ப்பு

.தமிழ்நாட்டின் ஒசூரில் கிட்டத்தட்ட 250 ஏக்கரில் டாடா எலக்ட்ரானிக்ஸ்  நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக்கான ஆலையை  அமைத்துள்ளது. இந்த ஆலையில், வரும் நவம்பர் மாதம் முதல் உற்பத்தி துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தொழிற்சாலையின்வாயிலாக 50,000 பேருக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பாக பெண்கள் பெரும்பான்மையோர் இதில் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புக்கான 4வது உற்பத்தி ஆலையாகவும், டாடாவின்இரண்டாவதுஆலையாகவும் இது உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத் தவரையில், தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ஆப்பிள்  ஐபோன் உற்பத்தி அலைக்கு அடுத்தபடியாக இந்த ஆலை இரண்டாவது  இடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த இரண்டு ,மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 5 கோடி ஐ- போன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனமும், அதன் துணை தயாரிப்பு நிறுவனங்களும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News