டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடரில் நிஹால் சரின், வந்திகா அகர்வால்2வது இடம் பிடித்தனர்.
டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடர் கோல்கட்டாவில் ,ஓபன் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுன் எரி கைசி, நிஹால்சரின், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான ஓபன் பிரிவில் இந்தியாவின் நிஹால்சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
18 சுற்று கொண்ட 'பிளிட்ஸ்' முறையிலான போட்டிகள் ,ஓபன் பிரிவில், 8 வெற்றி, 8 'டிரா', 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி அடுத்த இரு இடங்களை தலா 11 புள்ளிகளுடன் வென்றனர். பெண்களுக்கான ப்ளிட்ஸ் பிரிவில், 18 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் வந்திகா அகர்வால், 2வதுஇடம் பிடித்தார்.
0
Leave a Reply