இந்திய அணி உலக கோப்பை ஹாக்கி தகுதி சுற்றின் பைனலுக்கு முன்னேறியது.
பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் நடக்கவுள்ளது. இதற்கானதகுதி சுற்று ஐதராபாத்தில் மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொருபிரிவிலும் முதலிரண்டு இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா, இத்தாலி அணிகள் நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்குகிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
0
Leave a Reply