தங்கலான் விக்ரமின் நடிப்பு
தங்கத்தை தேடி எடுக்கவெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாகசியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும்வெளிக்காட்டி விட்டார். இந்த படத்தை சியான்விக்ரமின் நடிப்புக்காக மட்டுமேரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்குசென்று பார்க்கலாம்.கோலார் பகுதியில் தங்கத்தைதேடி பல அரசர்கள்அலைந்த நிலையில், ஆங்கிலேயர்களும்தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.வட ஆற்காடு பகுதியில்வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்கசரியான ஆட்கள் என ஆங்கிலேய துரையானகிளெமண்ட்(டேனியல் கால்டாகிரோன்)தங்கலான்(சியான் விக்ரம்)இருக்கும் கிராமத்துக்கு வருகிறான். தங்கலான்தனது மனைவி கங்கம்மா(பார்வதி) மற்றும் தனது குழந்தைகள், மக்கள் என விவசாயம் செய்துவாழ்ந்து வருகிறார்.ஆனால், அந்த பகுதியில்உள்ள ஜமீன்(முத்துகுமார்)மக்களிடம் இருந்து நிலத்தைஅபகரித்து அவர்களை அந்த நிலத்திலேயே அடிமைகளாகவேலை வாங்கி வருகிறார்.இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற வேண்டுமென்றால் வெள்ளைக்காரனுக்கு தங்கம் தேடுவதில்உதவி செய்ய வேண்டும்என பசுபதி, ஹரி உள்ளிட்ட சிலருடன்தங்கலான் ஆனை மலைக்குசெல்கிறார்.
தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும்தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாகதங்கலானின் பாட்டன் காடயன்ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படிதங்கத்தை எடுத்துக் கொடுத்தான்என்கிற கதையை காட்டுகின்றனர். தங்கத்தை எடுத்துக் கொடுத்தால்வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்குஅகன்று போகும் என தனது மக்களுடன்போராடும் தங்கலானுக்கு தங்கம்கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின்கதை.
அப்போகலிப்டா,அவதார் படங்களை போல தமிழில் ஒரு பெரும் முயற்சியாகஇந்த தங்கலான் பேசப்படும். ஆஸ்கர்விருது கிடைக்கக் கூடிய நடிப்பை சியான்விக்ரம் கொடுத்திருக்கிறார். படத்திற்கு தேவையானகூஸ்பம்ப்ஸ் இசையை ஜி.வி. பிரகாஷ்கொடுத்திருக்கிறார்.நடிகர்கள்: சியான்விக்ரம், பார்வதி, மாளவிகாமோகனன், பசுபதிஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: பா. ரஞ்சித்'தங்கலான்'. வெளியான முதல்நாளில் உலகளவில் ரூ.26.44 கோடி வசூலித்தது. இது குறித்து விக்ரம் 'புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
0
Leave a Reply