சென்னை, மதுரையில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் .
21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்சென்னை, மதுரையில், மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகளுடன், 2வது இடம் பிடித்த 'டாப்-2' அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
ஸ்பெயின்-நியூசிலாந்து, பிரான்ஸ்- ஜெர்மனி, நெதர்லாந்து - அர்ஜென் டினா, இந்தியா-பெல்ஜியம் அணிகள்இன்று சென்னையில் நடக்கும் காலிறுதியில் மோதுகின்றன.
பெல்ஜியம் அணிலீக் சுற்றில் நமீபியா, எகிப்தை வீழ்த்தி, ஸ்பெயினிடம் மட்டும் தோல்வியடைந்தது. இன்று இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கும்.
மதுரை, ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நேற்று, 17-24வது இடங்களுக்கான போட்டிகள் நடந்தன.
நமீபியா, ஆஸ்திரியா அணிகள் மோதிய போட்டி 2-2 என 'டிரா' ஆனது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஆஸ்திரியா 2-0 என வெற்றி பெற்றது.
வங்கதேச அணி 13-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. தென் கொரிய அணி 6-3 என எகிப்தை வென்றது.
0
Leave a Reply