2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஜீலை 27-ம் தேதி இன்று கோலாகலமாக துவங்கியது
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இருப்பினும் 78 பேர் மட்டுமே துவக்க விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். சிலருக்கு அடுத்த நாள் போட்டி இருந்ததால், அணிவகுப்பை தவிர்த்தனர்.
லவ்லினா (குத்துச்சண்டை) மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) தீபிகா குமாரி (வில்வித்தை) ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
துப்பாக்கி சுடுதலில் நடக்கவுள்ள 15 போட்டியிலும் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மனுபாகர், ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர், அஞ்சும் மவுத்கில், இளவேனில் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் பொறுத்தவரையில் திறமை மட்டுமல்ல. வெற்றிக்க அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும் 22 வயதான மனுபாகர், உலக அளவில் பல்வேறு தொடரில் பதக்கங்கள் குவித்துள்ளார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரது துப்பாக்கி சரியாக வேலை செய்யாமல் போக, கடைசி வரை மீண்டு வரவே முடியவில்லை.
ஒலிம்பிக் டென்னிசில் 1996ல் (அட்லாண்டா) லியாண்டர் பயஸ், ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இது தான் இந்தியா வென்ற ஒரே பதக்கம். இந்தியா முதல் பதக்கம் வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து சி பிரிவு லீக் போட்டியில், ஸ்பெயின், ஐப்பான் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணிக்காக பொன்மதி அய்டனா (22 வது நிமிடம்) மரியோனா (74வது) தலா ஒரு கோல் அடிக்க, ஐப்பான் சார்பில் புஜினோ (11வது) ஆறுதல் தந்தார். மற்றொரு போட்டியில் ஜெர்மனி, 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
ஆண்கள் ரக்பி காலிறுதியில் பிரான்ஸ், அர்ஜென்டினா மோதின. இதில் பிரான்ஸ் அணி 26-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் பிஜி அணி 19-15 என அயர்லாந்தை வீழ்த்தியது.
0
Leave a Reply