டிசம்பருக்குள் திறக்கப்படும் நடிகர் சங்கக் கட்டடம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மூத்த நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை டிசம்பர் முதல் வாரத்திற்குள் தமிழக முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்று அறிவித்தார். மேலும், நம்மில் ஒருவராக இருந்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
0
Leave a Reply