கேரள முதல்வர் ரசித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
மலையாளத்தில் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்து வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ₹300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தைப் பாராட்டி கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள பதிவில்:
"நீண்ட இடைவெளிக்குப் பின் எனது மகள் மற்றும் அவரது தோழியுடன் திரையரங்கில் பார்த்து ரசித்த படம் இது. இதன் கதைக்களம் என் சிறுவயது கால கிராமங்களையும், அங்குள்ள வாழ்க்கையையும், தூய்மையான அன்பையும் கண்முன் நிறுத்தியது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி. மற்றும் நடிகர் சங்கீத் ஆகியோரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினேன். நிவின் பாலி மற்றும் மமிதாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply