நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்துவருகிறது.
ஆண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காத உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவ் 6 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 டிரா) முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் பேபியானோ கருணா 4½ புள் ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 7சுற்று முடிந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3% புள்ளிகளுடன் (ஒருவெற்றி, 5 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறார். இனி எஞ்சிய 7 சுற்றிலும் சிறந்த முடிவுகளை பெற்றால் மட்டுமே பிரக்ஞானந்தாவால் பட்டம் வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும்.
பெண்கள் பிரிவில் 8 வீராங்கனைகள் இடையிலான, தமிழகத்தின் ஆர். வைஷாலி கடைசி இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடத்தில் ,பட்டம் வெல்லும்வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார்.
0
Leave a Reply