25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ  மேம்பாட்டு  பயிற்சி  நிறைவு விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில்,   (30.04.2025) விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு  பயிற்சி  நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மனிதன் என்பவன் தன்னால் தவறவிடப்பட்ட வாய்ப்புகளை குறித்து வருந்தக்கூடிய குற்ற  உணர்ச்சிகளின் தொகுப்பாக இருக்கிறான். மேலும், கடந்த 400 ஆண்டுகளாக உலகத்தில் அதிகமாக தனிமனித மேம்பாடு பற்றி கூறுகின்ற பொழுது,  வாய்ப்புகள் என்பது நமக்கு ஒரு முறை தான் வருகிறது.  நாம் ஒரு இலக்கை அடைவதற்கு அதிகமான போட்டிகள் இருக்கும். அதாவது போட்டியினுடைய தன்மைகள் அதிகமாக இருக்கிறது.

ஹென்றி போர்டு என்ற தத்துவ அறிஞர் கூறும் பொழுது, நீங்கள் வாழ்க்கையில், எவ்வளவு பெரிய இலக்குகள் வைத்திருந்தாலும், அந்த இலக்கு சிறு இலக்குகளாக பிரித்து கொண்டால் ஒரு பெரிய இலக்கை அடைவதற்கான கஷ்டம் இருக்காது என்று கூறுகிறார்.
நீங்கள் எதாவது போட்டித்தேர்விற்கு படிக்கின்ற பொழுது, உங்களுடைய இறுதி இலக்கை நினைத்தீர்கள் என்றால் அது உங்களுடைய ஆசை. ஆனால், அந்த இறுதி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு சின்ன சின்ன இலக்குகள் மூலமாக தான் கிடைக்கிறது.100 சின்ன சின்ன இலக்குகள் சேர்ந்தது தான் ஒரு பெரிய இலக்கு ஆகும். நாம் சின்ன சின்ன முயற்சிகளை, இலக்குகளை சின்ன சின்ன சிற்பங்களாக செதுக்கி கொண்டால், நாம் எவ்வளவு பெரிய இலக்குகளை கூட அடைய இயலும்.

எப்பொழுதும் நீங்கள், அனைவரும் உங்களுக்கான  இலட்சியங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். மேலும், நமக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.வாய்ப்புகள் சாதாரணமாக அனைவரையும் தேடி வராது. நாம் தான் வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News