25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


'தி கோட்' டிரைலர் புதிய சாதனை படைத்தது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'தி கோட்' டிரைலர் புதிய சாதனை படைத்தது

விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைத்துள்ளார். ஆக., 17ல் டிரைலர் வெளியானது. 24 மணிநேரத்தில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த தமிழ் டிரைலர்களில் விஜய்யின் 'லியோ' 32.7 மில்லியன் பார்வைகளை பெற்றது.நடிகர் விஜய் - ன் "தி கோட்" டிரெய்லர் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு பேசுகையில் நடிகர் அஜித் அவர்கள் படத்தின் டிரெயிலரை பார்த்து விட்டு சூப்பரா இருக்குடா.! உனக்கும் விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கு டா. விஜய்க்கும் படக்குழுவினருக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு என்று மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் இனி சத்தியமாகக்  குடிக்கக் கூடாது  என்ற  மங்காத்தா அஜித் டயலாக்கை  விஜய் பேசியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News